ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். இவர் ஒரு சுரங்க என்ஜினீயர். 1989ம் ஆண்டு மேற்கு வங்க சுரங்கம் ஒன்றில் அவர் பணியாற்றியபோது சுரங்கத்தில் பணியாற்றிய நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கியபோது அதனை தனது சமயோசித மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அவர்களை மீட்டார். இதனால் அவர் மேற்கு வங்க மாநிலத்திலும், பஞ்சாபிலும் நிஜ ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். 2019ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார்.
அவரது வாழ்க்கை தற்போது சினிமாவாகி வருகிறது. இதில் ஜஸ்வந்த் சிங்காக அக்ஷய்குமார் நடிக்கிறார். நிஜ ஜஸ்வந்த் சிங் லண்டனில் படித்தவர். அந்த காட்சிகள் இப்போது லண்டனில் படமாகி வருகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார்.
இந்த நிலையில் அக்ஷய்குமாரின் ஜஸ்வந்த்சிங் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்ஷய் குமர் வைத்திருக்கும் செயற்கை தாடியும், முதிர்ச்சியான முகமும் சற்றும் ஜஸ்வந்த்சிங் போன்று இல்லை என்றும், செயற்கையான மேக்அப் மூலம் அக்ஷய்குமார் நடிப்பதை விட ஜஸ்வந்த்சிங் தோற்றம் கொண்ட ஒருவரை கொண்டு படத்தை எடுக்கலாம் என்றும் இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மாமன்னன் பிருத்விராஜின் தோற்றத்தை கெடுத்தது போன்று ஜஸ்வந்த் சிங் தோற்றத்தை அக்ஷய்குமார் கெடுக்க வேண்டாம் என்றும் கூறிவருகிறார்கள்.