நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‛விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஏற்கனவே தான் நடித்து சூப்பர் ஹிட் ஆன சில படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், விக்ரம் படத்தை அடுத்து மலையாளத்தில் மாலிக் உட்பட பல படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்.
இந்த படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்கு அனிருத் சிறப்பாக இசையமைத்திருந்ததால் கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கும் அவர் தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மலையாள சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் சுசின் ஷ்யாம் என்பவர் இசையமைக்க இருக்கிறாராம்.
அந்த வகையில் கமலின் புதிய படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்று விக்ரம் படத்தில் பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சில மலையாள நடிகர்கள் நடித்தது போன்று கமலின் புதிய படத்திலும் மலையாளத்தில் பிரபலமான சில நடிகர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.