நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை சாந்தினி. இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். தன்னோடு நெருக்கமாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னோடு வாழ்ந்ததாகவும் தான் கர்ப்பமானபோது அதை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பொய்யான புகார் கூறிய சாந்தினி மீது மணிகண்டன் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கண்டனம் தெரிவித்தது.