நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். அவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவருக்கும் உபாசனாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை.
இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய ராம்சரண் 'இப்போது எங்கள் கவனமெல்லாம் அவரவர்கள் இலக்கை நோக்கி இருக்கிறது. குழந்தை பெற்றுக் கொண்டால் கவனம் சிதறும் என்பதால் இப்போதைக்கு நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதில்லை" என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இனி எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று உபசனா அறிவித்திருப்பது சிரஞ்சீவி குடும்பத்தினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் சார்பில் ஒரு விழா நடந்தது. இந்த விழாவில் ஈசா யோகா மைய நிறுவனர் சத்குரு கலந்து கொண்டார். அப்போது உபாசனா அவருடன் கலந்துரையாடினார். இந்த உரையாடலில் உபாசனா சத்குருவிடம் "எனது 10 வருட திருமண வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் குடும்பத்தை நேசிக்கிறேன். ஆனால் என்னிடம் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை, அதற்கான தகுதி உங்களுக்கு இல்லையா? என்பது பற்றி கேட்கிறார்கள். என்னை போன்ற பெண்களுக்கு இதற்கான வழி தெரிய வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த சத்குரு 'நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால் உங்களுக்கு நான் விருது தருவேன். பெருகி வரும் மக்கள் தொகையை பார்க்கும்போது இது நல்ல முடிவாக இருக்கும்" என்று சொன்னார். 'இதுகுறித்து எனது தாயாரிடமும், மாமியாரிடமும் விரைவில் உங்களை பேச வைப்பேன்' என்றார் உபசனா.
இந்த கலந்துரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது குறிப்பாக ராம் சரணின் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.