நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி தமிழில் அறிமுகமாகும் படம் 'வாரியர்'. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் மூலம் கிர்த்தி ஷெட்டி தமிழுக்கு வருகிறார். ஜுலை 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளிவந்தாலும், தமிழில் இப்படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள லிங்குசாமி, தமிழில் இதற்கு முன்பு தயாரித்துள்ள சில படங்களுக்காக வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை இன்னும் அடைக்காமல் இருக்கிறார். அது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பஞ்சாயத்து நடந்து வருகிறது.
கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' படம் அவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. அவர் தயாரித்த, விஜய் சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்' எப்போதோ படம் முடிந்தும் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அவர் தயாரித்து வந்த நான்கைந்து படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 'வாரியர்' படத்தை புது நிறுவனம் ஒன்றைத் துவங்கி அதன் மூலம் தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் லிங்குசாமி. எனவே, அவருக்கு கடன் கொடுத்து வசூல் செய்யாமல் இருப்பவர்கள் பஞ்சாயத்து கூட்டியுள்ளார்களாம். இன்று அந்த மெகா பஞ்சாயத்து நடக்க இருக்கிறதாம். பேச்சு வார்த்தைக்குப் பிறகே 'வாரியர்' தமிழில் வருமா, வராதா என்பது தெரிய வரும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.