Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவை போன்று சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்

11 ஜூலை, 2022 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Vijay-is-acting-in-a-guest-role-without-getting-paid

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரபு தேவா இயக்கிய ரவுடி ரத்தோர் என்ற படத்தில் ஒரு பாடல் கட்சியில் நடித்திருந்த விஜய், மீண்டும் இந்த ஜவான் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, தற்போது கமலின் விக்ரம் படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது போன்று, விஜய்யும் இந்த ஜவான் படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஜவான் படத்தில் விஜய் நடிக்கும் காட்சியை ஒரே நாளில் படமாக்க அட்லீ திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பார்த்திபனின் இரவில் நிழல் படத்திற்கு தடை கோரி வழக்கு!பார்த்திபனின் இரவில் நிழல் ... தமிழில் 'வாரியர்' வருமா ? வராதா ? தமிழில் 'வாரியர்' வருமா ? வராதா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)