நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகை சேர்ந்த வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவி. தமிழில் கும்கி படத்தில் ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அதைத்தொடர்ந்து எட்டுத்திக்கும் மதயானை, கதகளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார். மலையாளத்தில் வில்லனாக, குறிப்பாக சைக்கோ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவியர்கள் முன்பாக காரில் இருந்தபடி தனது ஆடைகளை கழற்றி அநாகரிகமாக நடக்க முயன்றார். இதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஸ்ரீஜித் ரவி தான் அது என்பதை உறுதி செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீஜித் ரவிக்கு ஜாமின் வழங்க மறுத்து விட்டதுடன் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் சொல்லப்பட்டாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே மாதிரி பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.