நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமாவில் எதேச்சையாக அறிமுகமாகி, அப்படி அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் விதமாக நடிக்கும் நடிகர்கள் உருவாவது மிக அபூர்வம். அப்படி பூ படத்தில் இயக்குனர் சசியால் அறிமுகப்படுத்தப்பட்டு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் பூ ராமு. அதைத்தொடர்ந்து இத்தனை வருடங்களில் வெகுசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மனதில் நிற்கும்படியான தங்கமீன்கள், சூரரை போற்று என தான் நடித்த படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தவர் பூ ராமு.
அந்த வகையில் அவருக்கு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிப்படமாக உருவாகியுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டியுடன் படம் முழுவதும் இணைந்து நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் பூ ராமுவும் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் காலமானது திரையுலகின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி பூ ராமு குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். “தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக பூ ராமுவின் மறைவு குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவரும் ஒரு பாகமாக இருந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் மம்முட்டி.