இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோவாக இப்போதும் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படங்களில் ஒன்று தான் ''நின்ன தான் கேஸ் கொடு''. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகியான காயத்ரி. மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற ஹிட் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்காக தனது தோற்றத்திலும் பேசும் வித்தியாசமான மலையாள பாஷையிலும் என புதிய ஒரு ஆளாகவே மாறிவிட்டார் குஞ்சாக்கோ போபன். இந்த படப்பிடிப்பின்போது வீடியோ காலில் தனது மகனுடன் பேசியபோது தன்னை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று பெருமையுடன் இந்த கதாபாத்திரம் பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல இந்த படத்தின் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் தான் இயக்கிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் கதையை முதலில் தன்னிடம் தான் வந்து கூறினார் என்றும் ஆனால் அந்த கதையை தன்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் அந்த படத்தை நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் குஞ்சாக்கோ போபன்.
அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணனை அழைத்த குஞ்சாக்கோ போபன், “ஏண்டா துஷ்டா.. என்னிடம் கதையை ஒழுங்காக கூறாமல் இப்படி ஒரு நல்ல படத்தை என்னிடமிருந்து பறித்து விட்டாயே” என்று செல்லமாக அவரை கடிந்து கொண்டதுடன் அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வா நான் தான் நடிப்பேன் என்று செல்லமாக கண்டிஷனும் போட்டு அதன்படி தற்போது நடித்து வரும் படம் தான் இந்த படம்” என்றும் கூறி உள்ளார் குஞ்சாக்கோ போபன்.