Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனவரி 20-ல் மதுரையில் அன்னக்கொடி ஆடியோ ரிலீஸ்

17 ஜன, 2013 - 16:19 IST
எழுத்தின் அளவு:

பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத்தின் ஆடியோ ரிலீஸ் மதுரையில் வருகிற ஜனவரி 20ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. கிராமிய மண் மனம் மாறாமல் திரைக்கதையை கொடுத்து சினிமாவில் வெற்றிக்கொடியை நாட்டியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் புதியபடம் "அன்னக்கொடியும் கொடிவீரனும்". இப்படத்தில் புதுமுகம் ஹீரோவாகவும், ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாகவும்  நடித்து வருகின்றனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை பிரம்மாண்டமாக துவக்கிய பாரதிராஜா, தற்போது படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ்க்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். அதில் ஒருகட்டமாக படத்தின் பாடல் வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்.

தேனியில் ஷூட்டிங்கை ஆரம்பித்த பாரதிராஜா, இசைவெளியீட்டை மதுரையில் நடத்த இருக்கிறார். மதுரை ரயில்வே மைதானத்தில் இந்த இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்துகிறார். படத்தின் ஆடியோ சி.டி.யை இசைஞானி இளையராஜா வெளியிட, அதனை டைரக்டர் மணிரத்னம் பெற்றுக்கொள்கிறார். இவர்கள் தவிர தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக இந்த ஆடியோ வெளியீட்டிற்கு ரஜினி,கமல், ஸ்ரீதேவி ஆகியோரை அழைக்க பாரதிராஜா திட்டமிட்டு இருந்தார். ஆனால் இவர்கள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. கமல் விஸ்வரூபம் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இதில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. அதேபோல் ரஜினி கோச்சடையான் வேலைகளில் இருப்பதால் அவரும் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஜெயானந்தம் - thamiznaadu ,இந்தியா
17 ஜன, 2013 - 19:44 Report Abuse
 ஜெயானந்தம் இந்தாளு விழாவுக்கு இவர் பையன் வந்தாலே பெருசு. இதுல கமல், ரஜினி ஸ்ரீதேவி எல்லாம் எதிர் பார்கிறது கொஞ்சம் ஓவரா தெரியல?!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in