மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு |
பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. வருகிற ஜனவரி 7-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. அப்படம் குறித்து மகேஷ்பாபு அளித்த ஒரு பேட்டியில், ராஜ மவுலி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இந்திய படமாக உருவாகிறது. அனைத்து இந்திய மொழிகளிலும் பிரமாண்டாக தயாரிக்கப்பட உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் ராஜமவுலி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.