பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் மோகன்பாபு மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர்களை நடிகர் மோகன்பாபு அடித்து, மிரட்டி தன் மகனுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்தார் என்று பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட கிருஷ்ண மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் முடிந்த நடிகர் சங்க தேர்தலில் நடந்த பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீங்கள் சாட்சியாக இருந்தீர்கள். முன்னாள் டிஆர்சி உறுப்பினர் மோகன் பாபுவும், முன்னாள் தலைவர் நரேஷும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நாங்கள் பார்த்தோம்.
சங்க உறுப்பினர்களை அடித்து, வசைபாடி, அச்சுறுத்தினர். உங்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையும், அவர்களின் அடியாட்களையும் வாக்குச்சாவடிக்குள் நீங்கள் அனுமதித்தீர்கள் என்று நான் நினைக்கிறேன். இதில் சில காட்சிகள் ஊடகங்களிடம் கசிந்தன.
சங்க தேர்தலுக்கு பின் நடந்த சம்பவங்களும், பொதுமக்கள் முன்னிலையில் நம்மைக் கேலிப் பொருளாக்கியுள்ளது. சில தெரிந்த நபர்களின் நடத்தை முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்க உறுப்பினர்கள், நடந்த சம்பவங்களின் உண்மைப் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.