'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள சினிமா இயக்குனர் அஜயன், காலமானார். ஒரு படைப்பாளி எத்தனை படம் இயக்கினார் என்பதை விட, எத்தனை காலம் ரசிகர்களின் நினைவில் நிற்கிறார் என்பது தான் அவருக்கு கிடைக்கும் உயர்ந்த மரியாதை. அப்படி மலையாளத்தில் 1984ல் 'பெருந்தச்சன் என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கிய இயக்குனர் அஜயன் அந்தப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
மலையாள சினிமாவில் நல்ல படங்களை பட்டியலிட்டால் முதல் 5௦ படங்களில் இந்தப்படத்திற்கும் ஒரு இடம் இருக்கும். எம்.டி.வாசுதேவன் நாயரின் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு சினிமாவில் இயக்குனரான இவர், பின்னாளில் அவரது கதையையே படமாக எடுத்து சாதனை செய்தார். ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் அதன்பின் அவர் படம் எதுவுமே இயக்கவில்லை என்பதுதான்.
66 வயதான அஜயன், புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலமானார். அவருக்கு கஷாமா என்ற மனைவியும், பார்வதி, லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அஜயன் உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.