மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சமீபகாலமாக மம்முட்டி, தான் நடித்து வரும் படங்களில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத கேரக்டர்களாகத்தான் நடித்து வருகிறார். இனி அடுத்து வரும் குஞ்சாலி மரைக்கார், மற்றும் மாமாங்கம் ஆகிய படங்களில் வரலாற்று மாவீரனாக நடிக்க உள்ளார். இந்தநிலையில் மிகவும் ஆச்சர்யமான செய்தியாக குள்ள உருவத்தில் நடிக்க இருகிறாராம் மம்முட்டி.
இதற்குமுன் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல் பிரமிக்க வைக்கும் விதமாக குள்ள உருவத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதன்பின் ஷாருக்கான் அப்படி நடித்தாலும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இப்போது மம்முட்டியின் முறை. கடந்த 2011ல் மம்முட்டியை வைத்து 'டபுள்ஸ் என்கிற படத்தை இயக்கிய சோஹன் சீனுலால் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.
ஆராம்பத்தில் திலீப் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த இந்த கதை, சில சூழல்களால் தற்போது மம்முட்டிக்கு கைமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.