ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபத்தில் வெளியான தனது வரதன் பட வெற்றியால் தான் நடித்து வரும் அடுத்தடுத்த படங்களில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார் நாடிகர் பஹத் பாசில். அந்தவகையில் அடுத்த படமும் வெற்றிதான் என சொல்கின்ற விதமாக, பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் 'ஞான் பிரகாசன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
கடந்த 2013ல் வெளியாகி ஹிட்டான ஒரு இந்தியன் பிரணயகதா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம். அந்தவகையில் சுமார் 17 வருடங்களுக்கு பிறகு சத்யன் அந்திக்காடுவும் சீனிவாசனும் இணைகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு
கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்த இந்தப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.