ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஆரம்பமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, தெலுங்கிலும் அறிமுகமப்படுத்தப்பட்டது. அங்கு ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் சீசனை ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார்.
கடந்த ஆண்டு ஜுலை 16 முதல் செப்டம்பர் 24 வரை பிக் பாஸ் அங்கு ஒளிபரப்பானது. 14 பேர் முதல் நாளிலிருந்தும் வைல்ட் கார்டு, பின்னர் இருவரும் நிகழ்ச்சிக்குள் நுழைந்தனர். நடிகர் சிவபாலாஜி முதல் சீசனில் வெற்றி பெற்றார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வீடு அரங்கம், புனேவில் அமைக்கப்பட்டிருந்தது.
இப்போது பிக் பாஸ் சீசன் 2வை நடிகர் நானி தொகுத்து வழங்க உள்ளார். முதல் சீசனை தொகுத்து வழங்கிய ஜுனியர் என்டிஆர் புதிய படம் ஒன்றில் பிஸியாக இருப்பதால் அவருக்குப் பதிலாக நானி வந்துள்ளார். இந்த சீசனுக்கான புரோமோ இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த புரோமோவிற்கு யு டியுபில் அதற்குள் 18 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.
முதல் சீசனில் போட்டி நாட்களாக 70 நாட்கள் மட்டுமே வைக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது சீசன் 100 நாட்களாக அதிகமாக்கப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான அரங்கம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் உருவாகி வருகிறது. 16 பிரபலங்கள் பங்கு பெற உள்ளார்கள், 70 கேமராக்கள் அவர்களது நடவடிக்கைகளைப் படமாக்க உள்ளன. ஜுன் மாத்தில் 'பிக் பாஸ் சீசன் 2' தெலுங்கு ஆரம்பமாக உள்ளது.