படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கேரளாவில் ஆதிவாசி இளைஞர் ஒருவர் அரிசி திருடினார் என சந்தேகத்தின் பேரால் பொதுமக்கள் மற்றும் சில விஷமிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இல்லையில்லை கொல்லப்பட்டார். நாடெங்கிலும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா முதல்வர் பிணராயி விஜயன் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நடிகர் மம்முட்டி, “தயவுசெய்து மதுவை ஆதிவாசி என அழைக்காதீர்கள். அவனை என் இளைய சகோதரன் என்று சொல்வேன். அவனை கும்பலாக கொன்றுவிட்டீர்கள்.. அவனும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு உரிமையுள்ள மனிதன் தானே..
பசிக்காக திருடுபவனை நீங்கள் திருடன் என அழைக்க முடியாது. அது சமூகத்தின் அவலம். சட்டத்தை கையில் எடுத்துக்கொளும் சமூகம் எப்படி சக மனிதனுக்கு நியாயம் செய்யும்.. எங்களை மன்னித்துவிடு மது” என உருக்கமாக கூறியுள்ளார் மம்முட்டி.