ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் விஜய் நடித்த ஆதி, சிவகாசி போன்ற படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் இந்த கல்யாண்ராம். தற்போது தெலுங்கில் எம்எல்ஏ., என்ற படத்தில் நடிக்கிறார். உபேந்திரா மாதவ் இயக்க, காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த போகி பண்டிகை தினத்தில் வெளியானது. அதில் அரசியல் தலைவர் வேடத்தில் கல்யாண்ராம் நடித்திருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த படத்தின் வசன காட்சிகள் இந்த மாதத்தோடு முடிவடைந்து அடுத்த மாதம் பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் ஒப்பந்தமான நேரத்தில் பாரிஸ் பாரிஸ் படத்திலும் காஜல்அகர்வால் ஒப்பந்தமானதால், அவருக்காக ஓரிரு மாதங்கள் காத்திருந்து தற்போதுதான் அவர் சம்பந்தப்பட்ட வசன காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதையடுத்து, பிப்ரவரியில் கல்யாண்ராம்-காஜல்அகர்வால் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தை மார்ச் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.