ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மனம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில். அதன்பிறகு அகில் என்ற தலைப்பு கொண்ட படத்தில் அவர் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து விக்ரம்குமார் இயக்கத்தில் ஹலோ என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த டிசம்பர் 22-ந்தேதி திரைக்கு வந்தது.
முன்னதாக, அகிலின் இரண்டாவது படத்தை பெரிய ஹிட் படமாக்கி விடவேண்டும் என்று உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வெளியிட திட்டமிட்டு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் படக்குழு பப்ளிசிட்டியும் மேற்கொண்டது. நடிகர் ராணாவும் அந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதையடுத்து, திரைக்கு வந்த ஹலோ படத்திற்கு ஓரளவு ஓப்பனிங் இருந்தபோதும் வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால், அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட்ட அப்படம் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் ஹலோ படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.