ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம் குமார் இயக்கத்தில் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்துள்ள படம் ஹலோ. முதல்படம் வெற்றி பெறாத நிலையில், இந்த படத்தை வெற்றி பெற செய்து விட வேண்டும் என்று பரபரப்பான பப்ளிசிட்டிகளில் இறங்கியுள்ளார் இந்த படத்தை தயாரிக்கும் நாகார்ஜூனா. அதன்காரணமாக அகில் ஒரு பெரிய பில்டிங்கின் மேல் கைகளை ஊன்றியபடி தலைகீழாக நிற்பது போன்று இந்த படத்தின் முதல்தோற்றம் வெளியிட்டப்பட்டது.
மேலும், இந்த ஹலோ படத்தை அமெரிக்காவிலும் வெளியிடுகிறார்களாம். அதனால் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதனால் அமெரிக்காவிலும் ஹலோ படக்குழு சுற்றுப்பயணம் செய்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, பாகுபலி படத்தின் வில்லனாக நடித்து அமெரிக்காவிலும் பிரபலமாகியுள்ள ராணாவையும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்துள்ளனர்.