ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராம்சரண் - சமந்தா இணைந்து நடித்துள்ள படம் "ரங்கஸ்தலம்". 1980-களில் நடக்கும் கதையில் இந்தப்படம் உருவாகி வருகிறது. கோதாவரி ஆற்றுப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் கிராமத்து செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெற்றபோது இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுத்த நிலையில், தற்போது தனது தந்தை சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்மரெட்டி படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் மீண்டும் தனது ரங்கஸ்தலம் படத்திற்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்துள்ளார் ராம்சரண்.
காரணம், சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ராம்சரண் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த ரங்கஸ்தலம் படத்தின் முதல் தோற்றம் டிசம்பர் 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு வெளியாகயிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது டிசம்பர் 9-ந்தேதி காலை 9 மணிக்கு ரங்கஸ்தலம் முதல்தோற்றத்தை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.