Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வில்லனுக்காக மோதிய 4 ஆக்சன் இயக்குனர்கள்

13 அக், 2017 - 17:47 IST
எழுத்தின் அளவு:
4-Action-directors-worked-in-Villain

வயது ஏற ஏற ஆக்சன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் மோகன்லால் என்பதைத்தான் அவரது அடுத்தடுத்த படங்கள் தெளிவாக சொல்கின்றன. 'புலி முருகன்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுடன் இணைந்து சண்டைப்பிரியர்களுக்கு விருந்துவைத்த மோகன்லால், அடுத்தததாக பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'வில்லன்' படத்திலும் சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளாராம். குறிப்பாக இதில் நடிகர் விஷாலும் முக்கியமான வேடத்தில் நடிப்பதால், நான்கு ஆக்சன் இயக்குனர்களை வைத்து படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளாராம் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.

மகதீரா, மிர்ச்சி, சரொனைடு ஆகிய படங்களில் சண்டைக்காட்சிகளில் பிரமிக்க வைத்த இரட்டையர்களான ராம்-லக்ஸ்மன், ஷாருக்கானின் ராய்ஸ், ராம்சரணின் துருவா, விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ரவிவர்மா, தமிழில் புதிய பாணியில் படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்த 'துருவங்கள் பதினாறு' படத்தில் பணியாற்றிய ஜி என நான்கு ஆக்சன் இயக்குனர்கள் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு வடிவமைத்துள்ளார்களாம். இந்தப்படம் வரும் அக்-27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஹன்ஷிகா, ராசி கன்னா, மஞ்சு வாரியார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Advertisement
பிபிபிபி தூதரானார் ரகுல்பிரீத்சிங்!பிபிபிபி தூதரானார் ரகுல்பிரீத்சிங்! மலையாள படத்தின் தழுவலாக வெளியாகியுள்ள நாகார்ஜூனா படம்..! மலையாள படத்தின் தழுவலாக ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Iravukku Aayiram Kangal
    Tamil New Film Seyaal Movie
    • செயல்
    • இயக்குனர் :ரவி அப்புலு

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in