ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெள்ளித்திரையில் பிரபலமாக இருக்கும் காமெடி நடிகர்களை விடுங்கள்.. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற காமெடியன்கள் கூட டிவி பக்கம் தலைகாட்ட விரும்புவதில்லை.. ஆனால் மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ப்ளவர்ஸ் சேனலில் 'காமெடி சூப்பர் நைட்' என்கிற டாக் ஷோவை கிட்டத்தட்ட 15௦ நாட்களாக நடத்தினார். அப்போது பட வாய்ப்புகள் குறைவாக இருந்த நேரம் என்பதால், சரி வாய்ப்பில்லாமல் டிவி பக்கம் ஒதுங்கிவிட்டார் என சொலப்பட்டது.
ஆனால் சிறந்த குணச்சித்திர நடிகராக தேசியவிருது பெற்ற பின்னர் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் பிசியான காமெடியனாக மாறிவிட்டார் சுராஜ். அதிலும் காமெடி என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் சில இயக்குனர்கள் இவரை உருமாற்றி வருகிறார்கள். இப்படி பிசியான சூழலில் தான், மீண்டும் தான் ஏற்கனவே நடத்திய 'காமெடி ஸ்டார் நைட்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார் சுராஜ்.
கடந்த இரண்டு வருடங்களில் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் உட்பட பல பேர், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்காமல் விலகிவிட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதற்காகவே சுராஜ் திரும்பவும் அழைக்கப்பட்டுள்ளாராம்.