ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது ரசிகர்கள் செய்யும் அலப்பறை குறைந்தபாடில்லை. முன்பு தமிழ்நாட்டில் மட்டும் இருந்த கட் அவுட் கலாச்சாரம், நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வது போன்றவை கடந்த சில வருடங்களாக மலையாள ரசிகர்களையும் பிடித்துக்கொண்டு விட்டது. சரி மலையாள நடிகர்களுக்குத்தான் அப்படி பண்ணுகிறார்கள் என்றால், கேரளாவில் தமிழ் நடிகர்களின் ரசிகர்களாக இருக்கும் கேரளாவை சேர்ந்தவர்களும் நம் நடிகர்களுக்கு பாலபிஷேகம் பண்ணுவதுதான் ஆச்சர்யம்.. இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லையே என்கிறார் மலையாள இளம் நடிகரான சன்னி வெய்ன்..
தற்போது இவர் நடித்துள்ள போக்கிரி சைமன் படம் வரும் செப்-22ல் ரிலீசாக இருக்கிறது.. இந்தப்படத்தில் இவர் தீவிரமான விஜய் ரசிகராக நடித்துள்ளார். படத்தில் விஜய்யின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது போன்ற காட்சிகளில் நடித்துள்ள சன்னி வெய்ன், “நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடக்கின்றன.. ஆனால் எதற்காக போராட்டம் நடத்தினார்களோ அதெல்லாம் சரியாகிவிட்டதா என்ன..? தனக்கு பிடித்த நடிகரின் படம் ரிலீஸ் என்பது ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாள்.. அதில் சின்ன விஷயமான பாலாபிஷேகத்தை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்றுதான் புரியவில்லை” என கூறுகிறார் சன்னி வெய்ன்..