ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையட்டி பலரும் தனித்தனியாக ஓணம் பாடல்களை இணைய தளத்தில் பதிவேற்றி இருந்தார்கள். அவற்றில் "எந்தடே சிமிக்க கம்மல்" என்ற பாடல் இ¬ணையத்தில் பட்டைய கிளப்புகிறது. மோகன்லால் நடித்த வெள்ளிப்பண்டிதே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் அது. ஷான் ரஹ்மான் இசையில் வினித் சீனிவாசனும், ரஞ்சித் உன்னியும் பாடி இருந்தார்கள்.
இந்தக் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் ஓணம் சேலை அணிந்து அற்புதமாக ஆடவிட்டு படம் பிடித்திருக்கிறார்கள். எந்த வித நடன முன்பயிற்சியும் இல்லாமல் அழகான முகபாவனைகள் காட்டி அனுபவித்து ஆடியிருக்கும் இந்த வீடியோதான் இப்போது வைரலாக பரவியிருக்கிறது. வெளியான மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் பார்த்து விட்டார்கள். இன்னும் சில நாளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் என்கிறார்கள். இந்த வீடியோவை இண்டியன் ஸ்கூல் ஆஃப் காமெர்ஸ் என்ற கல்லூரி மாணவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
வெளிப்பண்டிண்டே புத்தகம் படம் கடந்து ஆகஸ்ட் மாதம் 30ந் தேதிதான் வெளிவந்தது. படமும் வெற்றி பெறவில்லை. பாடல்களும் கவனம் பெறவில்லை. ஆனால் இப்போது சிமிக்கி கம்மல் பாடல் தூள்கிளப்பிக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் பாடிய கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பட்டைய கிளப்பட பாடல் இடம்பெற்ற 3 படம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.