ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2016ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகளில் மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதுபெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி.. இவர் நடித்த 'மின்னாமினுங்கு' படத்திற்காகத்தான் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. சுரபி லட்சுமி மலையாளத்தில் ஒன்றும் மிகப்பெரிய ஹீரோயின் இல்லை.. சொல்லப்போனால் அவர் ஹீரோயின் லிஸ்ட்டிலேயே இல்லை.. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருபவர்..
இப்போது அவருக்கு கிடைத்துள்ள தேசிய விருது அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உண்டு பண்ணிவிட்டது.. இந்தநிலையில் அவருக்கு விருது பெற்றுத்தந்த 'மின்னாமினுங்கு' படம் இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்தப்படம் நன்றாக இருப்பதாக பலரும் கூறியுள்ள நிலையில், நடிகர் பிருத்விராஜ் இந்தப்படம் மிகச்சிறப்பான படம் என்றும், அனைவரும் இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கவேண்டும் என்றும் ஒரு வீடியோ மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார்..
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, “இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.. ஆனால் படம் பார்த்தவர்கள் பலரும் எனக்கு போன் செய்து இந்தப்படத்தை மிஸ் பண்ணிவிடாமல் பாருங்கள் என கூறி வருகிறார்கள்.. இதிலிருந்தே படம் எப்படி இருக்கும் என நன்றாக தெரிகிறது.. நானும் விரைவில் இந்தப்படத்தை பார்க்கப்போகிறேன்,.. நீங்களும் பாருங்கள்” என கூறியுள்ளார்..
இந்த வீடியோவில் பிருத்விராஜ் பேசும்போது அவர் அருகிலேயே சுரபி லட்சுமியும் நின்றிருந்தார்.. 'ஆயாளும் ஞானும் தம்மில்' என்கிற படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து சுரபி லட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதையும் கூறிய பிருத்விராஜ், அந்த நட்பின் அடிப்படையில் என்பதை விட, அவர் சிறந்த நடிகை என்பதாலேயே தான் 'மின்னாமினுங்கு' படத்தை பார்க்க சொல்லி ரசிகர்களிடம் சிபாரிசு செய்வதாக கூறியுள்ளார்.