ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜனதா கேரேஜ் படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. ராசி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தை கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர். அதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கான மூன்று கெட்டப்புகளுக்கும் தனித்தனி டீசர்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்பு ஜெய் லவகுசா படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஜெய் கேரக்டரின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரை யு டியூப்பில் வெளியிட்டு 24 மணி நேரத்தில் 4.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மற்றபடி டுவிட்டர், பேஸ்புக்குகளையும் சேர்த்து 7 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்களாம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர்., இந்த படம் செப்டம்பரில் ரிலீசாக இருக்கும் நிலையில், மற்ற இரண்டு கேரக்டர்களுக்கான டீசர்களையும் அடுத்தடுத்து வெளியிடுகிறாராம்.