ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'லை'. கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்தப்படத்தை ஹனுராகவபுடி இயக்கியுள்ளார். 2012ல் வெளியான 'அந்தால ராட்சசி' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அதே ஹனுராகவபுடி தான். தவிர இந்தப்படத்தில் மிக முக்கியமான வேடங்களில் அர்ஜுனும், தெலுங்கு நடிகர் ஸ்ரீராமும் (ஸ்ரீகாந்த்) நடித்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்றபோது நடிகர் அர்ஜுனும், நடிகர் ஸ்ரீராமும் கோபித்துக்கொண்டு படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
இதற்கு காரணம் இயக்குனர் ஹனுராகவபுடியின் செயல்பாடுகள் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபின் ஸ்கிரிப்ட்டிலும் வசனத்திலும் சில மாற்றங்களை அடிக்கடி செய்துள்ளாராம் ஹனுராகவபுடி. ஆனால் ஷூட்டிங்கிற்கு நல்ல மூடில் தயாராகி வரும் சீனியர்களான அர்ஜூன், ஸ்ரீராம் ஆகியோருக்கு இது போகப்போக எரிச்சலை ஏற்படுத்தவே, ஒரு கட்டத்தில் டென்ஷனாகித்தான் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறினார்களாம்.. பின் ஒருவழியாக இயக்குனரும் படக்குழுவினரும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்துவந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.. இந்தப்படம் வரும் ஆகஸ்ட்-11ல் ரிலீஸாக இருக்கிறது.