14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சரோஜா, கோவா, சென்னை 28, மங்காத்தா போன்ற படங்களில் நடித்த வைபவ் தெலுங்கில் தான் முதலில் நாயகனாக அறிமுகமானார். தெலுங்கு பட இயக்குனர் கோதண்டராமி ரெட்டியின் மகனான வைபவ், 2007ல் தனது தந்தையில் இயக்கத்திலேயே உருவான கொடவ எனும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் படுதோல்வி அடையவே தமிழ் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார் வைபவ். இயக்குனர் வெங்கட்பிரவின் படங்களில் பெரும்பாலும் காணப்பட்ட வைபவ் ஹீரோவாக நடித்த டமால் டுமீல், கப்பல், ஹலோ நான் பேய் பேசுறேன் போன்ற தமிழ் படங்கள் சுமார் ரகங்களே.
இதனால் மீண்டும் டோலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் வைபவ். இறுதியாக வைபவ் நடித்த தெலுங்கு படம் அனாமிகா 2014ல் வெளிவந்த இப்படத்தை இயக்குனர் சேகர் கமுல்லா இயக்கியிருந்தார். இந்நிலையில் ராம் சரண் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படடத்தில் வைபவ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. பெரும்பாலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கேரளாவில் படமாக்கப்படும் என கூறப்படுகின்றது.