மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
1971ல் இந்திய போர்க்கப்பலை தாக்க வந்த பாகிஸ்தான் போர்க்கப்பல் காஸி பற்றி சங்கல்ப் ரெட்டி புத்தகமாக எழுதி வெளியிட்டார். தற்போது அவரே இந்நிகழ்வை காஸி அட்டாக் என திரைப்படமாக இயக்கி தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ராணா, டாப்ஸி, கேகே மேனன், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ளனர். விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை டோலிவுட் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். ராணாவிற்கு பாகுபலி எனும் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர் ராஜமௌலி ராணாவின் காஸி படத்தை பார்த்து விட்டு படக்குழுவினர் திரைக்கு பின்னாலும் திரையிலும் அற்புதமான உழைப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார். நாகசைதன்யா, சமந்தா உள்ளிட்ட ராணாவின் டோலிவுட் நண்பர்களும் தெலுங்கானா அமைச்சர் ராமா ராவ் என பலரும் காஸி திரைப்படம் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.