ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் ஸ்டையில்ஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் டீஜே. இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கின்றார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிக்கின்றார். அல்லு அர்ஜூன் இரட்டை வேடங்களில் நடிப்பதால் இரு கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்துவிடாமல் இருக்க படப்பிடிப்புதளத்தில் ரகசியம் காக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அல்லு அர்ஜூன் ஆச்சாரமான அக்ரஹார ஐயராக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்த கெட்டப்பில் அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பங்கேற்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகின்றது. இப்படத்தின் பஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ள நிலையில் அல்லு அர்ஜூனின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் பரவியது படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.