காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மீண்டும் பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் : புதிய படம் ஆரம்பம் | பாலியல் வன்கொடுமை : தூக்கு தண்டனையே சரி : விஷால் | யூ-டியூப்பில் நேரலையில் பேசுகிறார் கமல் | ரஜினி கட்சியில் ஆனந்தராஜ்? | பிரபாஸ் படத்தில் இணைந்த இன்னொரு நாயகி | சினிமாவில் செக்ஸ் தொல்லை : ரம்யா நம்பீசன் ஒப்புதல் | பிகினியில் ரசிகர்களை சூடேற்றிய ராய் லட்சுமி | 'கோட்டயம் குர்பானா'வில் புதிய நயன்தாரா | பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்த உன்னி முகுந்தன் |
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகசைதன்யா குடும்பம் மறுபேதும் சொல்லவில்லை என்பதால் சம்ந்தா தொடர்ந்து திரைப்படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் இயக்குனர் ஒமர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ராஜூ ஹாரி ஹாதி எனும் ஹாரர் திரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நாகார்ஜூனா நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமந்தா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு சமந்தாவின் திருமணத்திற்கு பின்னர் தொடங்கும் என்பதால் மாமனாருடன் சமந்தா நடிக்கவுள்ளார் என டோலிவுட் வட்டாராத்தில் தற்போதே கிசுகிசுக்கப்படுகின்றது. மனம் படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளாரார்