ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்கிற பழமொழியைப்போல நடிகர் ஷாம், எந்த மொழி படங்களில் நடிக்கப்போனாலும் உடனே போலீஸ் யூனிபார்மை கையில் கொடுத்து விடுகிறார்கள். ஒருவேளை அவர் போலீஸ் கேரக்டரில் பிட் ஆக இருக்கிறார் என்பதாலும் இருக்கலாம். அல்லது இது ஏதேச்சையான ஒன்றாக கூட இருக்கலாம். அப்படித்தான் மலையாள திரையுலகில் மம்முட்டி நடிக்கும் 'தி கிரேட் பாதர்' படத்தில் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ள ஷாம், அங்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் ஆர்யா தான். பின்னே, ஆர்யா தானே இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களான பிருத்விராஜ் கூட்டணியில் ஆர்யாவும் ஒருவர் அல்லவா. “இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலைவிட கொஞ்சம் அதிக நேரம் வரும் இந்த கேரக்டரில் நீ நடித்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் மலையாள சினிமா பக்கமும் வா” என ஷாமை அழைத்ததும், படத்தின் இயக்குனர் ஹனீப் அதேனியிடம் இந்த கேரக்டரில் ஷாம் நடித்தல் நன்றாக இருக்கும் என ரெகமன்ட் செய்தததும் ஆர்யா தானாம். ஆர்யா தமிழில் அறிமுகமான 'உள்ளம் கேட்குமே' படத்தில் இருந்து ஷாமுடன் நல்ல நட்பை தொடர்வது குறிப்பிடத்தக்கது.