ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அன்னமைய்யா, ஸ்ரீராமதாஸ் உள்ளிட்ட பக்தி படங்களில் நடித்து வெற்றி கண்ட நாகார்ஜூனா மீண்டும் அப்படங்களின் இயக்குனர் ராகவேந்திர ராவுடன் இணைந்துள்ளார். ராகவேந்திர ராவ் இயக்கும் ஓம் நமோ வெங்கடேஷாய படத்தில் பெருமாள் பக்தர் ஹாத்தி ராம் பாபா வேடத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ப்ரக்யா ஜெய்ஸ்வால், விமலா ராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். மகேஷ் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தின் பிறமொழிகளுக்கான விநியோக உரிமை நல்ல விலைக்கு கைமாறியுள்ளது. ஓம் நமோ வெங்கடேஷாய படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி உரிமை ரூ 6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. பாகுபலி படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.