ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டைரக்சனுக்கு வினீத் சீனிவாசன், நடிப்புக்கு நிவின்பாலி என இருவரும் கூட்டணி அமைத்துள்ள மூன்றாவது படம் தான் ஜேஜெகப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்'.. ஜேக்கப்பாக நடிப்பது சாட்சாத் நிவின்பாலியே தான். இந்தப்படத்தின் கதையில் காதலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தராமல், குடும்ப உறவுகளை மையப்படுத்தி இயக்கியுள்ளாராம் வினீத் சீனிவாசன். அதனால் கதாநாயகியாக நடிக்க பிரபல நாயகி தேவையில்லை, ஒரு புதுமுக நடிகையே போதும் என படத்தை ஆரம்பித்தபோதே வலையையும் வீசிவிட்டார் வினீத் சீனிவாசன்..
அப்போதுதான் படத்தின் ஒளிப்பதிவாளரான ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு புதுமுகத்தை சிபாரிசு செய்தாராம். அந்தப்பெண் தான் இந்துலேகா, தாத்ரி ஆகிய விளம்பரப்படங்களில் நடித்த மாடலான ரிபா மோனிகா ஜான். அதுமட்டுமல்ல, மலையாள சேனலான மழைவில் மனோரமாவில் நடத்தப்பட்ட 'மிடுக்கி' ரியாலிடி ஷோவில் இரண்டாவது பரிசை தட்டிச்சென்றவரும் கூட. பெங்களூரில் தனது முதுகலை படிப்பை படித்துவரும் இவர் படித்துக்கொண்டே நடிப்பு, மாடலிங் இரண்டிலும் பேலன்ஸ் பண்ண விரும்புகிறாராம்.