ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பு பெற்ற கன்னட நடிகர் சுதீப், விஜய்யின் புலி படத்தில் வில்லனாக நடித்ததைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். சுதீப்பிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் கன்னடத்தில் ஏப்ரல் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பவன் கல்யாண் மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்த கோபாலா கோபாலா படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க சுதீப் ஆர்வம் காட்டி வருகின்றார். ஓ மை காட் எனும் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கோபாலா கோபாலா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தில் வெங்கடேஷ் நடித்த வேடத்தில் நடிக்க சுதீப் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
பவன் கல்யாண் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க கன்னட திரை உலகின் பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்ற அட்டரின்டிகி டரேடி படத்தின் கன்னட ரீமேக்கில் சுதீப் நடித்திருந்தார். தெலுங்கைப் போல் அப்படம் தமிழிலும் வெற்றி வாகை சூடியது. தற்போது மேலும் ஒரு பவன் கல்யாணின் வெற்றிப் பட கன்னட ரீமேக்கில் சுதீப் நடிக்கவுள்ளார்.