ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிருத்விராஜ் நடிப்பில் 'கர்ணன்' என்கிற சரித்திரப்படம் உருவாக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் பூஜையுடன் அறிவிப்பு வெளியான அதேசமயம், நானும்தான் 'கர்ணன்' ஸ்க்ரிப்ட்டை 23 வருடங்களாக உருவாக்கி வந்தேன் என ஒரு வெடிகுண்டை கொளுத்திப்போட்டார் கதாசிரியர் ஸ்ரீகுமார். இவர் உருவாக்கிய கதையில் கர்ணனாக மம்முட்டி நடிக்க இருப்பதாகவும், மதுபால் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ள அவர், 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதை உருவாக்க தயாரிப்பாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும், படத்தின் முன்கட்ட தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த சூழலில் தான், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே இந்த 'கர்ணன்' படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாக பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார்.
“ஐந்து வருடங்களுக்கு முன் பி.ஸ்ரீகுமார், இந்த கர்ணன் ஸ்கிரிப்ட்டை என்னிடம் கொடுத்து அதை படமாக இயக்கவேண்டும் என கேட்டார்.. ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்தேன். அப்பப்பா.. என்ன ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட்.. கிட்டத்தட்ட ஸ்ரீகுமாரின் பதினெட்டு வருட உழைப்பு அதில் தெரிந்தது. எனக்கும் அதை படமாக இயக்க ஆசை எழுந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட்டாக, அப்போதைய சூழலில் மலையாள சினிமாவில் அதுவரை யாரும் செலவிடாத தொகை தேவைப்படும் என அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு தோதான தயாரிப்பாளர்கள் யாரும் கிடைக்காமல், அப்போதைக்கு அந்த படத்தை இயக்கும் முயற்சியில் இருந்து விலகிவிட்டேன்” என கூறியுள்ளார் ஷாஜி கைலாஷ்.
அதன்பின் இந்தப்படத்தை மோகன்லாலை வைத்து இயக்குனர் ஹரிஹரன் இயக்குவதாக சொல்லப்பட்டு பின்னர் அந்த திட்டமும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.