ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில நடிகைகள் இருக்கிறார்கள்.. வாய்ப்பு கிடைக்க கஷ்டப்படும் காலத்தில் பவர்ஸ்டாருக்கு கூட ஜோடியாக நடிக்க தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.. ஆனால் ஒரு படம் நடித்து க்ளிக் ஆகிவிட்டாலோ, அல்லது மிகப்பெரிய நடிகருடன் முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டாலோ அவர்களது ஆட்டமும் பேச்சும் எல்லை தாண்டிவிடுகிறது.. இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டுக்குத்தான் ஆளாகி இருக்கிறார் மம்முட்டியுடன் கதாநாயகியாக நடித்த மலையாள நடிகை ஜூவல்மேரி. டிவி நடிகையாக இருந்து சினிமா நடிகையாக மாறிய, ஜூவல் மேரி போன ஜென்மத்தில் பண்ணிய புண்ணியமோ என்னவோ, அவருக்கு முதல் இரண்டு படங்களிலும் தொடர்ந்து மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் இரண்டாவதாக வெளியான 'பத்தேமாறி' படம் வெற்றிகரமாக ஓடுவதால் ஜூவல் மேரிக்கு கொஞ்சம் பவிசு ஏறிவிட்டதாம். அதனால் தான் அவரது முதல்பட தயாரிப்பாளரான ஹஷீப் ஹனீப் என்பவர், தான் அடுத்து தயாரிக்கும் 'ஆடுபுலியாட்டம்' படத்தில் அவரை கதாநாயகியாக அழைத்தபோது நடிக்க மறுத்துவிட்டாராம். அதற்கு அவர் மீடியாக்களில் சொல்லிவரும் காரணம் கதை தனக்கு பிடிக்கவில்லை என்பது தானாம். ஆனால் இப்போது உண்மையான காரணம் என்ன என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார் தயாரிப்பாளர்.
படத்தின் கதையை ஒரு வரி கூட கேட்காத ஜூவல்மேரி கதை நன்றாக இல்லை என சொல்லிவருவது மிகப்பெரிய பொய் என்றும் வயதான ஜெயராமுடன் நடிக்க முடியாது என்பதால்தான், இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறினாராம். அதுமட்டுமல்ல இதுவே பஹத் பாசில் நடிப்பதாக இருந்தால் உடனே சம்மதம் சொல்லி இருப்பாராம்.. ஆனால் ஜெயராமை விட வயது கூடிய மம்முட்டியுடன் மட்டும் இவர் எப்படி நடித்தார் என தெரியவில்லை. இப்போது இவருக்கு பதிலாகத்தான் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.. இப்போது அறிமுகமான நடிகைக்கு பதிலாக வயதான ரம்யா கிருஷ்ணன் எப்படி செட்டாவார் என சந்தேகிக்க வேண்டாம்.. ஜூவல்மேரியும் பார்ப்பதற்கு வயதானவர் போலத்தான் இருப்பார்.