நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு |
மோகன்லாலை கிட்டத்தட்ட கேரள தேசம் தங்கள் பொக்கிஷமாக கருதுகிறது என்றால் அது அவரது நடிப்பால் மட்டுமே அல்ல.. எப்பொழுதும் அவரிடம் காணப்படும் மனிதாபிமானமும் இன்னொரு காரணம். அது சமீபத்தில் வெளிப்பட்ட விதம் ரொம்பவே நெகிழ்ச்சியானது.. கடந்த மாதம் பல நாட்களாக கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதிகளில் மோகன்லால் நடித்துவரும் 'புலிமுருகன்' படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்படி கடந்த செப்-17ஆம் தேதி அன்று பெரும்பாவூரில் உள்ள மர அறுவை மில்லில் ஷூட்டிங் நடைபெற்றபோது, மோகன்லாலை காண கூட்டம் கூடியது.. வழக்கம்போல பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்.
அப்போது அங்கே சிறுமியான தனது மகளை அழைத்துவந்திருந்த ஒருவர் அவள் மோகன்லாலை நன்றாக பார்க்கட்டும் என அவரை அருகிலிருந்த கிரேனின் மேல் அமரவைத்தார்.. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி கிரேனில் இருந்து கீழே விழுந்துவிட்டாள். உடனே படப்பிடிப்பு தளத்தில் இருந்த காரில் சிறுமியை ஏற்றிக்கொண்டு பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சேர்த்தனர். ஆனால் நல்லவேளையாக அந்த சிறுமிக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. அதன்பின் நடந்த நிகழ்வுகள் சுவாரஸ்யம் மட்டுமல்ல, மோகன்லாலின் மனித நேயத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.
அன்று இரவு சிறுமி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு வந்த மோகன்லாலை கண்டு அவளது பெற்றோர்கள் திகைத்து போனார்கள்.. அப்போது மருந்தின் தாக்கத்தால் சிறுமி அரைத்தூக்கத்தில் இருந்தாள்.. அவள் உடல்நலம் பற்றி விசாரித்த மோகன்லால், தூங்கும் அவளை எழுப்ப விரும்பாமல், அவளது கட்டிலில் தொங்கவிடப்பட்டு இருந்த நோட்புக்கில் சிறுமி குணமடைய வாழ்த்தி, தனது ஆட்டோகிராப்பை பதிவு செய்துவிட்டு கிளம்பினார்.. மோகன்லால் வந்து சென்றதையே நம்பமுடியாத அந்த பெற்றோர், மறுநாள் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்வதர்காக பணம் கட்டச்சென்றபோது, மோகன்லாலின் மேனேஜர் ஏற்கனவே பில் தொகை முழுவதையும் செலுத்திவிட்டதை அறிந்து நெகிழ்ந்து போனார்களாம்.