ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுடின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரணின் நடனத்தைப் பார்த்து பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் பிரமித்து பாராட்டியுள்ளதே தற்போது டோலிவுட்டில் சூடான செய்தி. ராம் சரண் நடித்து வரும் ப்ரூஸ் லீ படத்தின் பாடல் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. அதே ராமோஜி பிலிம் சிட்டியில் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் தில்வாலே படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகின்றதாம்.
இந்நிலையில் ராம் சரணின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான் ராம் சரணின் நடன அசைவுகளைப் பார்த்து பிரமித்து பாராட்டியுள்ளார். அதிகாலை 2 மணிக்கு ப்ரூஸ் லீ படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ஷாருக்கான், ராம் சரண் மற்றும் படக்குழுவினருடன் நீண்ட நேரம் கலந்துரையாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவிற்கு அடுத்த படியாக ஷாருக்கான் ராம் சரணின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள ப்ரூஸ் லீ படத்தை இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்குகின்றார். இப்படத்தின் டிரைலரை வெளிவந்த ஐந்து நாட்களுக்குள்ளாகவே 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்து விட்டனர். அக்டோபர் 16 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. உலகில் 350 இடங்களில் வெளிவரும் ப்ரூஸ் லீ படம் குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள 220க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடப்படவுள்ளது.