'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். தமிழில் திரிஷா நடித்த 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இவர் நடித்த படம் ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. பிசியான நடிகையாக இருக்கும் இவர் நடிப்பில் அடுத்ததாக 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் தீபு கருணாகரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று தனது பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார்.
ஆனால் அதை மறுத்த அனஸ்வரா ராஜன், “இயக்குனர் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து என்னுடைய படங்களை பார்த்தால் அவற்றின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நான் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள், அதன் விவரங்கள் குறித்து எனக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.
அதே சமயம் தன்னை பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்ததற்காக இயக்குனர் தீபு கருணாகரன் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் அனஸ்வரா ராஜன். இந்த நிலையில் நடிகர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இவர்கள் இருவரையும் அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிந்து சுமூகமாக தீர்வு வழங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் அனஸ்வரா ராஜன்.