ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை தமன்னாவை இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் பாராட்டி தள்ளியிருக்கிறார். இதனால் தமன்னா சந்தோஷத்தில் இருக்கிறார். நடிகை தமன்னா இந்தியில் ஹிம்மாத்வாலா என்ற படத்தில் நடிக்கிறார். ஹீரோ அஜய் தேவ்கான். தி பியூட்டி என்று தமன்னாவின் படத்தை மட்டும் போட்டு போஸ்டரடித்து விளம்பரம் எல்லாம் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். இந்திப்பட கனவு பலித்துள்ள சந்தோஷத்தில் இருக்கும் தமன்னாவை மேலும் சந்தோஷப்படுத்தும் வகையில், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் பேட்டி அமைந்துள்ளது.
இந்தித் திரையுலகின் நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் ஹிருத்திக் ரோஷன், தமன்னாவின் நடனத்தை சிலாகித்து சொல்லியிருக்கிறார். என்னுடன் நடித்த பல நடிகைகளைவிட தமன்னாவின் நடனம் சிறப்பாக இருக்கிறது. எல்லோராலும் தமன்னா அளவுக்கு ஆட முடியாது என்று பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதனால் நடிகை தமன்னா ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்.