ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூரை 10 லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகின்றனர். உடனே அவர் பின்னாலா..? என்று கேட்காதீர்கள். ட்விட்டர் வலைதளத்தில் தான் அவரை இத்தனை பேர் ஃபாலோ பண்ணுகின்றனர். சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ட்விட்டர் வலைதளத்தில் எந்த பிரபலங்களை, அதிகம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்பது குறித்த சர்வே நடத்தியது. அதில் இந்தியாவிலேயே சோனம் கபூர் தான் நம்பர்-1 இடத்தை பிடித்து இருக்கிறார். அவரை மட்டும் 10லட்சம் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள். இதன்மூலம் சோனம் கபூர் பாலிவுட் நடிகர்கள் அமிதாப், அமீர் கான், ஷாரூக்கான் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டாப்-10 பிரபலங்கள் பட்டியல்...
* சோனம் கபூர்
* சசி தரூர்
* ப்ரியங்கா சோப்ரா
* அமிதாப் பச்சன்
* ராம்கோபால் வர்மா
* ஹிருத்திக் ரோஷன்
* கிரண் பேடி
* பாரா கான்
* அக்ஷ்ய் குமார்
* சித்தார்த்