ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் எஸ்.எஸ்.தமனும் ஒருவர். அதன்பிறகு இசையில் கவனத்தை திருப்பி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கடும் போட்டியாளராக திகழ்ந்து வரும் தமன், தற்போது ஸ்கெட்ச், பாக்மதி என பல மெகா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான கோல்மால் அகெய்ன் என்ற படத்தின் டைட்டீல் பாடலுக்கு இசையமைத்து இந்தியில் அறிமுகமானார் எஸ்.எஸ்.தமன். இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியில் அறிமுகமான முதல் படமே வெற்றி பெற்றிருப்பதை அடுத்து இந்தி சினிமாவிலும் பிரவேசிக்கப் போகிறாராம் தமன்.
மேலும், தான் அறிமுகமான பாய்ஸ் படத்தில் ஐந்து பேரில் ஒருவராக நடித்த தமன், தற்போது இந்தியில் அறிமுகமாகியுள்ள கோல்மால் அகெய்ன் படத்திலும் ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராகத்தான் இசையமைத்திருக்கிறார். ஆக, பாய்ஸ் அவருக்கு சினிமாவில் ஒரு நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது போன்று இப்போது கோல்மால் அகெய்ன் இந்தி படமும் பாலிவுட்டில் தமனுக்கு நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்தியுள்ளதாம்.