விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கன்னடத்தில் வெளியான யு டர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், பின்னர் விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்போது நிவின்பாலி நடித்து வரும் ரிச்சி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், முதன்முறையாக அவர் பாகுபலி வில்லன், ராணா தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். மேலும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தபோதும் நன்றாக தெலுங்கு பேசுவாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அதன்காரணமாக எங்கள் குடும்பம் பல ஊர்களுக்கு மாறிக்கொண்டேயிருப்போம். அந்த வகையில், ஐதராபாத்திலுள்ள திருமல்ஹரியில் 6 ஆண்டுகள் இருந்திருக்கிறோம். அதனால் எனக்கு நன்றாக தெலுங்கு பேசத் தெரியும் என்று கூறியுள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், முதல் தெலுங்கு படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசப் போகிறாராம்.