ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் சிம்ஹா, ஸ்ரீ ராமராஜ்ஜியம் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு, ஸ்ரீ ராமராஜ்ஜியம் நயன்தாராவுக்கு நந்தி விருது பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் அவர் பாலகிருஷ்ணாவின் 102வது படத்தில் இணைகிறார். ஜெய சிம்ஹா என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறதாம்.
மேலும், இதற்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஆதவன் படத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு, தெலுங்கில் தயாராகும் இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இந்த படத்தில் பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடியுடன், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, பிரேமானந்தம், முரளிமோகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.