ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக வலம்வந்து கொண்டிருப்பவர் சன்னி லியோன். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால் அந்த பாடல் எதிர்பார்த்தபடி ரசிகர்களை கவரவில்லை.அதனால் அதையடுத்து சன்னி லியோனுக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனால், இந்தியில் நாயகியாக நடித்து வரும் அவருக்கு தெலுங்கு, கன்னட படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு அவ்வப்போது கிடைத்து வருகிறது.
அந்த வகையில், டிகே, லூ அலியா போன்ற கன்னட படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடிய சன்னிலியோன், தெலுங்கில் கரண்ட் தீகா என்ற படத்திலும் நடனமாடியிருந்தார். அதையடுத்து தற்போது டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் பிஎஸ்வி கருட வேகா என்ற தெலுங்கு படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் சன்னிலியோன். மேலும், இந்த படத்தில் கிஷோர் வில்லனாக நடிக்கிறார். இதுவரை அவர் நடித்ததில் இது அவருக்கு மறக்க முடியாத சிறந்த படமாக இருக்கும் என்கிறார்கள்.