ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் பிரபலமான நடிகை ராணி முகர்ஜி. முன்பு போன்று அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில், அதுவும் கதையின் நாயகியாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் ‛மார்தானி' படம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து ராணி முகர்ஜி அடுத்தப்படியாக ‛ஹிச்கி'- என்ற படத்தில் நடிக்கிறார். சித்தார்த் பி.மல்கோத்ரா இயக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மனிஷ் சர்மா இணைந்து தயாரிக்கிறார்கள்.
மார்தானி போன்று ஹிச்கியும் பெண்களை மையமாக வைத்து தான் உருவாகிறது. ஒரு பெண் தனது பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் ஆரம்பமானது, ராணி முகர்ஜி முதல்நாள் படப்பிடிப்பில் பங்கேற்றார், தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.