ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட் 300 கோடி ? | ஸ்ரீ ரெட்டிக்கு சொல்லிக் கொடுத்த ராம்கோபால் வர்மா | ரஜினி, தனுஷ்க்கு நன்றி தெரிவித்த விஷால் | மகாநதி டப்பிங்கை முடித்தார் சமந்தா | புதிய படத்திற்கு தயாராகும் ராம்சரண் | தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைகிறது | ஆதாரம் உள்ளது - ஜீவிதாவிற்கு ஸ்ரீரெட்டி பதில் | ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து லோக் ஆயுக்தா : கமல் | மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் டிடி | ஒரு பட நடிகையின் அலம்பல் |
பாலிவுட்டில் சிறந்த நடிகர்களில் மனோஜ் பாஜ்பாயும் ஒருவர். தமிழ் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர். தற்போது ‛நாம் சபானா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் மும்முரமாய் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் எப்போதும் ஸ்டார் நடிகர்களின் வாரிசுகளுடன் போட்டி போட்டது கிடையாது என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛எப்போதுமே நான் வாரிசு நடிகர்களுக்கு போட்டியாக படங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்து கிடையாது. எனது ஆரம்பகாலம் முதலே அப்படி படங்களில் நடித்தது இல்லை. ஒருபோதும் வாரிசு நடிகர்களை நான் போட்டியாக கருதியது கிடையாது. ஆனால் நவாசுதீன் சித்திக், இர்பான் கானை போட்டியாக கருதுவேன்'' என்று கூறியுள்ளார்.
‛நாம் சபானா' படம் வருகிற மார்ச் 31-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.