ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கு யோகா கற்றுக்கொடுக்கும் டீச்சராக இருந்தவர் அனுஷ்கா. அதன்பிறகு நாகார்ஜூனா மூலமே தெலுங்கு சினிமாவில் நடிகையாக என்ட்ரியான அவர், 2007ல் நாகார்ஜூனா நடித்த டான் படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். பின்னர், கிங், கேடி, ரகடா, சோகடே சின்னி நயனா, ஊபிரி ஆகிய படங்களில் ஒரு பாடல் மற்றும் நட்புக்காக நடித்தார். முக்கியமாக நாகார்ஜூனா படமென்றால் எந்தமாதிரியான வேடமென்றாலும் நடிப்பதற்கு தயாராக இருந்து வந்தார் அனுஷ்கா.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் நாகார்ஜூனா நடித்துள்ள ஓம் நமோ வெங்கடேசாயா என்ற படத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. பக்தி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனுஷ்கா கிருஷ்ணம்மா என்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக, அருந்ததி போன்ற ஒரு அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும் அனுஷ்கா, இந்த படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றபோதும், அவர் படத்தில் நடித்திருப்பதே தனக்கு பெருமை என்று கூறியுள்ளார்.